வால்பாறையில் சிறப்பு மக்கள் குறைதீர்ப்பு முகாம்; ரூ 5 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: வால்பாறையில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ 5 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோவை: வால்பாறையில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ 5 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நலத் திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமை வகித்தார். தமிழக உள்ளாட்சித்துறை மற்றும் சிறப்பு திட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து, 989 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 46 பேர்களுக்கு உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா 53 பேருக்கும், வன விலங்கு தாக்கி இறந்த 4 குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை, 40 பேருக்கு தையல் இயந்திரம், 15 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம், 51 பேர்களுக்கு ஈமச்சடங்கு தொகை, சலவை இயந்திரம் உட்பட ரூ 5 கோடியே 6 லட்சத்து 39 ஆயிரத்து எழுபத்து நான்கு ரூபாய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட அமைச்சருக்கு வால்பாறை அ.தி.மு.க சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக, 51 புதிய சிறிய உயர் மின் கோபுர விளக்கை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, முன்னாள் எம்.பி.மகேந்திரன், முன்னாள் அமைச்சர் தாமோதரன், மாவட்ட வருவாய் அலுவலர், பொள்ளாச்சி கோட்டாட்சியர் அனைத்து துறை அலுவலர்கள் காவல்துறையினர் கட்சி நிர்வாகிகள், பயனாளிகள் தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...