கோவை: கோவை மாநகரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்பட்டு வரும் பான்மசாலா குட்கா பொருட்களை தடை செய்ய தொடர்ந்து செயல்பட்டு வரும் மாநகர காவலர்களுக்குப் பாராட்டுகளை தெரிவித்த காவல் ஆணையாளர் நற்சான்றிதழ் வழங்கினார்.
கோவை: கோவை மாநகரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்பட்டு வரும் பான்மசாலா குட்கா பொருட்களை தடை செய்ய தொடர்ந்து செயல்பட்டு வரும் மாநகர காவலர்களுக்குப் பாராட்டுகளை தெரிவித்த காவல் ஆணையாளர் நற்சான்றிதழ் வழங்கினார்.
தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையிலும் கோவை மாநகரில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து பான்மசாலா குட்கா பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், இந்த குட்கா பொருட்கள், பயன்படுத்துபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு சுவைகளிலும் தயாரிக்கப்பட்டு கவர்ச்சிகரமான பாக்கெட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை மாநகரை பான் மசாலா குட்கா பொருட்கள் பயன்படுத்தாத நகரமாக மாற்ற மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில், துணை ஆணையாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பாலாஜி சரவணன் அவர்களின் தலைமையிலான தனிப்படை குழுவினர் பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் மறைமுகமாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு மாதம் மட்டும் நடைபெற்ற ரோந்து பணிகளின் மூலம் முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , சுமார் ஒரு கோடி மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநகர போலீசாரின் தீவிர நடவடிக்கைகளுக்கு காவல் ஆணையாளர் சுமித் சரண் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், பான் மசாலா குட்கா பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் தனிப்படை குழுவினருக்கு நற்சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்வில், மாநகர காவல் துணை ஆணையாளர் சட்டம் ஒழுங்கு பாலாஜி சரவணன், குற்றப்பிரிவு துணை ஆணையாளர் உமா, போக்குவரத்து துணை ஆணையாளர் முத்தரசு, தலைமையகம் துணை ஆணையாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.