கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரின் அனைத்து துறை அலுவலர்களுடன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் அவர்கள் தலைமையில் நகராட்சி நிர்வாக ஆணையாளர் கா.பாஸ்கரன் முன்னிலையில் கலந்தாய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள் தெரிவித்ததாவது:
கோவை மாவட்டத்திலும் மாநகராட்சி பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பராமரிக்கவும் தேவையான பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வண்டும் எனவும், சீரான குடிநீர் விநியோகம் நடைபெற சிறுவாணி, பில்லூர், ஆழியார் ஆகிய அணைகளின் நீர்த்தேக்க பராமரிப்பினை கவனமுடன் மேற்கொள்ள வேண்டுமெனவும், தூய்மைப் பணிகளையும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளையும், புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகளையும் சம்பந்தப்பட்டவர்கள் உடனுக்குடன் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டுமெனவும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துபவர்களையும், உற்பத்தி செய்பவர்களையும் ஆய்வு செய்து அபராதம் விதிக்கும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமெனவும், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பணிகளை சுகாதார பணியாளர்கள் தொய்வில்லாமல் மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் நகராட்சி நிர்வாக ஆணையாளர் கா.பாஸ்கரன் தெரிவித்தபோது, திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை மாநகராட்சியினர் கவனமுடன் மேற்கொள்ள வேண்டுமெனவும், பொதுமக்களிடமிருந்து மக்கும், மக்காத குப்பைகளைச் சேகரிக்கும் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகளையும், அரசின் திட்டப் பணிகளையும், நல்லமுறையில் மேற்கொள்ள வேண்டுமெனவும் நகராட்சி நிர்வாக ஆணையாளர் கா.பாஸ்கரன் அறிவுறுத்தினார்கள்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், மண்டல உதவி ஆணையர்கள் டி.ஆர்.ரவி, ஏ.ஜே.செந்தில்அரசன், மகேஷ்கனகராஜ், ஊரகவளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை, மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.