அனைத்து துறை அலுவலர்களுடன்‌ நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர் வழங்கல்‌ துறை அரசு முதன்மை செயலாளர்‌ ஆலோசனை

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலக கூட்டரங்கில்‌ மாவட்ட கண்காணிப்பு அலுவலரின்‌ அனைத்து துறை அலுவலர்களுடன்‌ நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர் வழங்கல்‌ துறை அரசு முதன்மைச்‌ செயலாளர்‌ ஹர்மந்தர் சிங்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நகராட்சி நிர்வாக ஆணையாளர்‌ கா.பாஸ்கரன்‌ முன்னிலையில்‌ கலந்தாய்வு மேற்கொண்டார்‌.

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலக கூட்டரங்கில்‌ மாவட்ட கண்காணிப்பு அலுவலரின்‌ அனைத்து துறை அலுவலர்களுடன்‌ நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர் வழங்கல்‌ துறை அரசு முதன்மைச்‌ செயலாளர்‌ ஹர்மந்தர் சிங்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நகராட்சி நிர்வாக ஆணையாளர்‌ கா.பாஸ்கரன்‌ முன்னிலையில்‌ கலந்தாய்வு மேற்கொண்டார்‌.

இக்கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சியர்‌ கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌, துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி ஆகியோர்‌ முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில்‌ நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர் வழங்கல்‌ துறை அரசு முதன்மைச்‌ செயலாளர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது:

கோவை மாவட்டத்திலும்‌ மாநகராட்சி பகுதிகளிலும்‌ அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும்‌, பராமரிக்கவும்‌ தேவையான பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள்‌ உடனுக்குடன்‌ மேற்கொள்ள வண்டும்‌ எனவும்‌, சீரான குடிநீர்‌ விநியோகம்‌ நடைபெற சிறுவாணி, பில்லூர், ஆழியார்‌ ஆகிய அணைகளின்‌ நீர்த்தேக்க பராமரிப்பினை கவனமுடன்‌ மேற்கொள்ள வேண்டுமெனவும்‌, தூய்மைப்‌ பணிகளையும்‌ மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளையும்‌, புதிய குடிநீர் இணைப்புகள்‌ வழங்கும்‌ பணிகளையும்‌ சம்பந்தப்பட்டவர்கள்‌ உடனுக்குடன்‌ தாமதமின்றி மேற்கொள்ள வேண்டுமெனவும்‌, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்களைப் பயன்படுத்துபவர்களையும்‌, உற்பத்தி செய்பவர்களையும்‌ ஆய்வு செய்து அபராதம்‌ விதிக்கும்‌ பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமெனவும்‌, டெங்கு காய்ச்சல்‌ தடுப்பு விழிப்புணர்வு பணிகளை சுகாதார பணியாளர்கள்‌ தொய்வில்லாமல்‌ மேற்கொள்ள வேண்டும்‌ என நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர் வழங்கல்‌ துறை அரசு முதன்மைச்‌ செயலாளர்‌ ஹர்மந்தர்‌ சிங்‌ அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் நகராட்சி நிர்வாக ஆணையாளர்‌ கா.பாஸ்கரன்‌ தெரிவித்தபோது, திடக்கழிவு மேலாண்மை திட்டப்‌ பணிகளை மாநகராட்சியினர்‌ கவனமுடன்‌ மேற்கொள்ள வேண்டுமெனவும்‌, பொதுமக்களிடமிருந்து மக்கும்‌, மக்காத குப்பைகளைச் சேகரிக்கும்‌ பணிகள்‌ மற்றும்‌ தூய்மைப்‌ பணிகளையும்‌, அரசின்‌ திட்டப்‌ பணிகளையும்‌, நல்லமுறையில்‌ மேற்கொள்ள வேண்டுமெனவும்‌ நகராட்சி நிர்வாக ஆணையாளர்‌ கா.பாஸ்கரன்‌ அறிவுறுத்தினார்கள்‌.

இந்த ஆய்வுக்கூட்டத்தில்‌ மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, மண்டல உதவி ஆணையர்கள்‌ டி.ஆர்‌.ரவி, ஏ.ஜே.செந்தில்‌அரசன்‌, மகேஷ்கனகராஜ்‌, ஊரகவளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை, மற்றும்‌ அனைத்து துறை அலுவலர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...