கோவை: அமைச்சர் எஸ்.பி வேலுமணியையும் கோவையை சேர்ந்த பெண்ணையும் அவதூறாக இணைய செய்தி நிறுவனம் போல், செய்தி தயாரித்து அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுந்த புகாரையடுத்து ஈரோட்டைச் சேர்ந்த திமுக உறுப்பினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து தமிழ்ச் செய்தி என்ற இணைய வடிவத்தில் செய்தி வெளியாகியிருந்தது. மேலும் இந்த செய்தியில் "ஷாக் அடிக்குது சோனா... நடந்து போனா... அம்பலமாகும் அமைச்சரின் அந்தப்புரம் அந்தரங்கம் அதிர்ச்சியில் கோவை அதிமுகவினர்" என பல அவதூறான வார்த்தைகள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், தமிழ் செய்தி பத்திரிகையின் மாவட்ட செய்தியாளர் பாலகணேசன் கொடுத்த புகாரின் பேரிலும், சோனாலி பிரதீப் கொடுத்த புகாரின் பேரிலும் கோவை மாநகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், இரு புகாரின் பேரில் அவதூறு பரப்பியதாக ஈரோடு மாவட்டம் 20வது வார்டு திமுக உறுப்பினர் ரகுபதி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர் .அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.