திருப்பூர்: தமிழக அரசு அரசாணை எண் 318ன் படி, 5 ஆண்டுகளுக்கு மேலான அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 5 ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை வீடு கட்டி மின் இணைப்பு பெற்று ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீண்ட காலமாக பட்டா வேண்டி பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்துள்ளனர் ஆனால் இதுவரை அந்த மனுக்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், தமிழக அரசு ஆணை எண் 318ன் ப,டி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அரசு புறம்போக்கில் வீடு கட்டி குடியிருப்பவர்களுக்குப் பட்டா வழங்க வேண்டும், நிலமற்ற தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும், மேலும் பணம் கொடுத்து நிலம் வாங்கி கிரையம் செய்து வீடு கட்டி வசிக்கும் பொதுமக்களை தமிழக அரசு அப்புறப்படுத்த முயற்சி செய்வதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ தங்கவேல் தலைமையில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.