கோவையில் செய்தி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி அவதூறு பரப்பியதாக புகார்; மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு

கோவை: தினசெய்தி பத்திரிக்கையின் பெயரை அவதூறாக பயன்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பத்திரிகையின் நிருபர் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை: தினசெய்தி பத்திரிக்கையின் பெயரை அவதூறாக பயன்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பத்திரிகையின் நிருபர் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினசெய்தி பத்திரிக்கையின் நிருபர் பாலகணேசன் (39). இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் தான் பணிபுரியும் தினசெய்தி பத்திரிக்கை போல, போலியாக தினச்செய்தி என்று இணையதளம் முகவரியை உருவாக்கி அவதூறுகளை பரப்பிவருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது;-

நேற்று தினச்செய்தி என்ற இணையதள முகவரியில், ஷாக் அடிக்குது சோனா .... நடந்து போனா .... அம்பலமாகும் அமைச்சரின் அந்தபுரம் அந்தரங்கம் அதிர்ச்சியில் கோவை அதிமுகவினர் என்று இழிவாகவும், அரசியல் பிரமுகரின் நற்பெயரை கெடுக்கும் விதத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, சோனாலி பிரதீப் என்ற பெண்ணை ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் பதிவேற்றம் செய்து சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளதாகவும், அதேபோல தினசெய்தி பத்திரிகையின் நற்பெயரை கெடுக்க நினைக்கும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...