கோவை: தினசெய்தி பத்திரிக்கையின் பெயரை அவதூறாக பயன்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பத்திரிகையின் நிருபர் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினசெய்தி பத்திரிக்கையின் நிருபர் பாலகணேசன் (39). இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் தான் பணிபுரியும் தினசெய்தி பத்திரிக்கை போல, போலியாக தினச்செய்தி என்று இணையதளம் முகவரியை உருவாக்கி அவதூறுகளை பரப்பிவருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது;-
நேற்று தினச்செய்தி என்ற இணையதள முகவரியில், ஷாக் அடிக்குது சோனா .... நடந்து போனா .... அம்பலமாகும் அமைச்சரின் அந்தபுரம் அந்தரங்கம் அதிர்ச்சியில் கோவை அதிமுகவினர் என்று இழிவாகவும், அரசியல் பிரமுகரின் நற்பெயரை கெடுக்கும் விதத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, சோனாலி பிரதீப் என்ற பெண்ணை ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் பதிவேற்றம் செய்து சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளதாகவும், அதேபோல தினசெய்தி பத்திரிகையின் நற்பெயரை கெடுக்க நினைக்கும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.