மேட்டுப்பாளையத்தின் புதிய நுழைவு வாயிலாக மாறி வாகனங்களை வரவேற்கும் சாலையோர மரங்கள்

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு என பல அடையாளங்கள் இருந்தாலும் தற்போது புதிய அடையாளமாக மேட்டுப்பாளையம் வருவோரை வரவேற்கும் நுழைவு வாயிலாக சாலையோர மரங்கள் மாறியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு என பல அடையாளங்கள் இருந்தாலும் தற்போது புதிய அடையாளமாக மேட்டுப்பாளையம் வருவோரை வரவேற்கும் நுழைவு வாயிலாக சாலையோர மரங்கள் மாறியுள்ளது.



மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் தான் உள்ளது இந்த அற்புதம். திருப்பூர், ஈரோடு மற்றும் கோவையில் இருந்து அன்னூர் மார்க்கமாக வரும் வாகனங்கள் மேட்டுப்பாளையத்திற்குள் நுழைய தேரம்பாளையத்தை கடந்தே செல்ல முடியும். அப்படி வருவோரை வரவேற்கும் விதமாக சாலையின் இரு புறங்களிலும் நூறாண்டுகள் பழமையான புளியமரங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு வளர்ந்து வானுயர்ந்து குடைபோல விரிந்து இரு புறமும் உள்ளது.

மேலும், ஒவ்வொன்றும் அடுத்தடுத்து உள்ள மரங்களை ஒன்றை ஒன்று தொட்டு நிற்பதால் இயற்கையாகவே அது ஒரு நுழைவு வாயில் போன்று அமைந்து பசுமை வாயிலாக மாறி, காண்போரை கவரும் வகையில் அமைந்துள்ளது. மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் தேரம்பாளையத்தை கடக்கும் அந்த ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு வெயிலின் தாக்கமே தெரியாத அளவிற்கு குடையின் கீழ் செல்வது போன்ற உணர்வினை ஏற்படுத்தும் வகையில் இந்த மரங்கள் அமைந்துள்ளன.

தேசிய நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இந்த மரங்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நிழலை தருவதுடன் ஆண்டிற்கு ஒரு முறை காய் பிடித்து டெண்டர் முறையில் அரசுக்கு பல லட்சம் வருவாயினையும் ஈட்டி வருகிறது. இந்த நிலையில் மக்களுக்கு நிழலும், மேட்டுப்பாளையத்திற்கு புதிய பெருமையைப் பெற்று தந்துள்ள இந்த மரங்களை சாலை விரிவாக்கம், குடிநீர் குழாய்கள் பதிக்க என மரங்களை சேதப்படுத்தாமல் இவற்றை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...