திருப்பூர்: திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் இருந்த 75 ஆண்டுகால பழமையான அரச மரம் மரம் நடவு செய்ய கோவை எடுத்துச் செல்லப்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் இருந்த 75 ஆண்டுகால பழமையான அரச மரம் மரம் நடவு செய்ய கோவை எடுத்துச் செல்லப்பட்டது.
திருப்பூர் குமரன் சாலையில் உள்ள டவுன்ஹால் மைதானத்தில் ஸ்மார்ட்சிட்டி பணிக்காக கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் அங்கிருந்த 75 ஆண்டுக்கும் மேலான அரசமரத்தை மறு நடவு செய்ய ஓசை அமைப்பு மற்றும் வனத்துக்குள் திருப்பூர் சேர்ந்த சமூக அமைப்புகள் முன்வந்தன.

இதனையடுத்து, மரத்தை மறு நடவு செய்ய அதன் கிளைகள் வெட்டப்பட்டு இன்று திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் இருந்து மரம் கிரேன் வாகனங்கள் உதவியுடன் வேருடன் தூக்கப்பட்டு, கோவை காளப்பட்டி பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மரங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துவது போலவே வளர்ந்த பழமையான மரங்களைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த மரத்தை மறு நடவு செய்வதாகவும் இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் சமூக அமைப்பின் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.