ஸ்மார்ட் சிட்டி பணிகள் காரணமாக திருப்பூரில் இருந்து கோவை மாவட்டத்திற்கு குடிபெயர்ந்த 75 ஆண்டுகால பழமையான அரச மரம்

திருப்பூர்: திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் இருந்த 75 ஆண்டுகால பழமையான அரச மரம் மரம் நடவு செய்ய கோவை எடுத்துச் செல்லப்பட்டது.


திருப்பூர்: திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் இருந்த 75 ஆண்டுகால பழமையான அரச மரம் மரம் நடவு செய்ய கோவை எடுத்துச் செல்லப்பட்டது. 

திருப்பூர் குமரன் சாலையில் உள்ள டவுன்ஹால் மைதானத்தில் ஸ்மார்ட்சிட்டி பணிக்காக கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் அங்கிருந்த 75 ஆண்டுக்கும் மேலான அரசமரத்தை மறு நடவு செய்ய ஓசை அமைப்பு மற்றும் வனத்துக்குள் திருப்பூர் சேர்ந்த சமூக அமைப்புகள் முன்வந்தன.



இதனையடுத்து, மரத்தை மறு நடவு செய்ய அதன் கிளைகள் வெட்டப்பட்டு இன்று திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் இருந்து மரம் கிரேன் வாகனங்கள் உதவியுடன் வேருடன் தூக்கப்பட்டு, கோவை காளப்பட்டி பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.



மரங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துவது போலவே வளர்ந்த பழமையான மரங்களைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த மரத்தை மறு நடவு செய்வதாகவும் இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் சமூக அமைப்பின் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...