கோவை: தேசத்தின் வளர்ச்சியின் சக்தியாகவும் இயந்திரமாக தமிழ்நாடு இருந்து வருவதாக சிட்கோவின் கூடுதல் தலைமைச் செயலாளரும், தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஹன்ஸ் ராஜ் வர்மா தெரிவித்தார்.
கோவை: தேசத்தின் வளர்ச்சியின் சக்தியாகவும் இயந்திரமாக தமிழ்நாடு இருந்து வருவதாக சிட்கோவின் கூடுதல் தலைமைச் செயலாளரும், தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஹன்ஸ் ராஜ் வர்மா தெரிவித்தார்.

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் கொடிசியாவும், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்தும் “இராணுவ தளவாட உற்பத்தியில் உள்ள தொழில் வாய்ப்புகள் மற்றும் இராணுவ கொள்முதல் நடைமுறைகள் விழிப்புணர்வு குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நேற்று கோவை கொடிசியா தொழில் காட்சி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கை தமிழக அரசின் சிட்கோவின் கூடுதல் தலைமைச் செயலாளர், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் ஹன்ஸ் ராஜ் வர்மா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
இந்திய இராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் கழகத்தை சார்ந்த அதிகாரிகள், கலந்துகொண்டு இத்துறையில் உள்ள தொழில் வாய்ப்புகள், முதலீடு, வருவாய் ஆகியன குறித்து எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிட்கோ தலைவர் பேசுகையில், "தொழில் மயமாக்கல், தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, செயல்திறன் மிக்க மேலாண்மை, நல்ல தொழில்துறை உறவுகள் மற்றும் மாநிலம் முழுவதும் தொழில்கள் பரவுவது பற்றிய மிகச் சிறந்த பதிவு தங்களிடம் உள்ளதாக கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கொடிசியா தலைவர் ஆர்.ராமமூர்த்தி, “கோவையில் பாதுகாப்பு கண்டுபிடிப்பு மையம் வருவதால், சிட்கோவும் கொடிசியாவும் இணைந்து எம்.எஸ்.எம்.இ.களுக்கு உற்பத்தி மற்றும் விநியோகத்தில் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இராணுவ தளவாடங்கள் மூலம் கோவை, சேலம், திருச்சி, ஓசூர் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இராணுவ அமைச்சகத்துக்கு தேவைப்படும் பல்வேறு தளவாட, உதிரிபாகங்கள், தயாரிக்க தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைக்கவும் இராணுவ பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப விளக்கங்களை அளித்தனர்.