தேசத்தின் வளர்ச்சியின் சக்தியாகவும் இயந்திரமாகவும் தமிழ்நாடு இருந்து வருகிறது - சிட்கோ தலைவர் ஹன்ஸ்‌ ராஜ் வர்மா

கோவை: தேசத்தின் வளர்ச்சியின் சக்தியாகவும் இயந்திரமாக தமிழ்நாடு இருந்து வருவதாக சிட்கோவின் கூடுதல் தலைமைச் செயலாளரும், தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஹன்ஸ்‌ ராஜ் வர்மா தெரிவித்தார்.


கோவை: தேசத்தின் வளர்ச்சியின் சக்தியாகவும் இயந்திரமாக தமிழ்நாடு இருந்து வருவதாக சிட்கோவின் கூடுதல் தலைமைச் செயலாளரும், தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஹன்ஸ்‌ ராஜ் வர்மா தெரிவித்தார்.



கோவை மாவட்ட சிறு தொழில்கள்‌ சங்கம்‌ கொடிசியாவும்‌, தமிழ்நாடு சிறுதொழில்‌ வளர்ச்சி நிறுவனமும்‌ இணைந்து நடத்தும்‌ “இராணுவ தளவாட உற்பத்தியில்‌ உள்ள தொழில்‌ வாய்ப்புகள்‌ மற்றும்‌ இராணுவ கொள்முதல்‌ நடைமுறைகள்‌ விழிப்புணர்வு குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நேற்று கோவை கொடிசியா தொழில் காட்சி வளாகத்தில்‌ நடைபெற்றது.

இந்த கருத்தரங்கை தமிழக அரசின்‌ சிட்கோவின் கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌, தலைவர்‌ மற்றும்‌ மேலாண்மை இயக்குநர்‌ தமிழ்நாடு சிறுதொழில்‌ வளர்ச்சி நிறுவனம்‌ ஹன்ஸ்‌ ராஜ் வர்மா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

இந்திய இராணுவ தளவாட உற்பத்தியாளர்கள்‌ கழகத்தை சார்ந்த அதிகாரிகள்‌, கலந்துகொண்டு இத்துறையில்‌ உள்ள தொழில் வாய்ப்புகள்‌, முதலீடு, வருவாய்‌ ஆகியன குறித்து எடுத்துரைத்தனர்‌.

இந்நிகழ்ச்சியில் சிட்கோ தலைவர் பேசுகையில், "தொழில் மயமாக்கல், தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, செயல்திறன் மிக்க மேலாண்மை, நல்ல தொழில்துறை உறவுகள் மற்றும் மாநிலம் முழுவதும் தொழில்கள் பரவுவது பற்றிய மிகச் சிறந்த பதிவு தங்களிடம் உள்ளதாக கூறினார்.



இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கொடிசியா தலைவர் ஆர்.ராமமூர்த்தி, “கோவையில் பாதுகாப்பு கண்டுபிடிப்பு மையம் வருவதால், சிட்கோவும் கொடிசியாவும் இணைந்து எம்.எஸ்.எம்.இ.களுக்கு உற்பத்தி மற்றும் விநியோகத்தில் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.



இந்த நிகழ்வில்‌ இராணுவ தளவாடங்கள்‌ மூலம்‌ கோவை, சேலம்‌, திருச்சி, ஓசூர்‌ மற்றும்‌ சென்னை ஆகிய பகுதிகளில்‌ இராணுவ அமைச்சகத்துக்கு தேவைப்படும்‌ பல்வேறு தளவாட, உதிரிபாகங்கள்‌, தயாரிக்க தமிழகத்தில்‌ நூற்றுக்கும்‌ மேற்பட்ட குறு சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ அமைக்கவும்‌ இராணுவ பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள்‌ கலந்துகொண்டு பொறியியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப விளக்கங்களை அளித்தனர்‌. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...