மாவோயிஸ்ட் டேனிஷை டிசம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு
நீலகிரி:
2016 ஆம் ஆண்டு குன்னூர் அருகே கொலக்கம்பை பகுதியில் அரசுக்கு எதிராக பழங்குடியின மக்களை மூளைச்சலவை செய்ததாக கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் டேனிஷ் பலத்த பாதுகாப்புடன் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி வடமலை முன்பு ஆஜர். டிசம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு.
தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநில எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், கேரளா மாநிலம் வயநாடு, கர்நாடக மாநிலம் குண்டல்பேட் பகுதிகளில் அவ்வபோது மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதால் எல்லையோரப் பகுதிகளில் மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு குன்னுரை அடுத்த கொலக்கம்பை, மூப்பர் காடு போன்ற பகுதிகளில் உள்ள பழங்குடியினர் கிராமத்தில் 5க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் புகுந்து, பழங்குடியினர் மக்களிடையே அரசுக்கு எதிராக மூளைச்சலவை செய்து, அரசுக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டி சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வழக்கில் மாவோயிஸ்ட் டேனிஷ் என்ற இளைஞர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட நிலையில் இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை முன்பு பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை டிசம்பர் 20ஆம் தேதி வரை மாவோயிஸ்ட் டேனிஷ்யை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட டேனிஷ் கேரளாவில் அரசுக்கு எதிரான பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசுக்கு எதிராக நீதிமன்ற வளாகத்தில் டேனிஷ் கோஷம் எழுப்பியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.