அனுமதியின்றி செயல்படும் வாரச்‌ சந்தைகளுக்கு தடைவிதிக்க கோரி மனு

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்‌ தனியாருக்கு சொந்தமான இடங்களில்‌ முறையான அனுமதியின்றி செயல்படும் வாரச்‌ சந்தைகளுக்கு தடைவிதிக்க கோரி சுதேசி வணிகர்கள் பாதுகாப்பு நலசங்கத்தினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்‌ தனியாருக்கு சொந்தமான இடங்களில்‌ முறையான அனுமதியின்றி செயல்படும் வாரச்‌ சந்தைகளுக்கு தடைவிதிக்க கோரி சுதேசி வணிகர்கள் பாதுகாப்பு நலசங்கத்தினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:-

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்‌ மளிகைக்கடை மற்றும்‌ காய்‌ கனி கடை வைத்து வியாபாரம்‌ செய்வதற்கு மாநகராட்சி உரிமம்‌ (டி அண்டு ஓ டிரேடர்ஸ்‌ உரிமம்‌) தொழில்‌ வரி, விவசாய வேளாண்மை விற்பனை குழு மூலம்‌ காய்கறி விற்க உரிமம்‌, எடைக்கல்‌ முத்திரை உரிமம்‌, உணவு கலப்பட சட்டம் (ESSAI)உரிமம்‌, குப்பைவரி உரிமம்‌, GST, தீயணைப்பு சேலை உரிமம்‌ (Fire Service) போன்ற உரிமங்களுடன்‌ கடை வாடகை, மின்சார கட்டணம்‌ ஆகியவை தரும்‌ கூடுதல்‌ சுமையாக சேர்த்து சிறு வணிகம்‌ செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இதில் எந்த ஒரு உரிமம்‌ இல்லாமல்‌ தொழில்‌ செய்தாலும்‌ சம்பந்தப்பட்ட துறையினர்‌ ஆய்வு மேற்கொண்டு அபராதம்‌ விதித்தோ, சட்ட நடவடிக்கைகள்‌ மேற்கொண்டோ அரசின்‌ விதிமுறைகளை பின்பற்றி வருகின்றனர்‌.

இந்நிலையில், எந்த ஒரு உரிமமும்‌ எடுக்காமல்‌ தனியார்‌ இடங்களில்‌ ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தைகள்‌ அமைத்து தனிநபர் லாபமடைவதோடு, அரசு விதிகளை பின்பற்றாமல் வரிஏய்ப்பு செய்வதாக குற்றம் சாட்டிய அவர்கள், வாரச்சந்தைகளால் சிறு வணிகர்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறினார்.

மேலும், முறையான அனுமதியின்றி இயங்கும் இந்த வார சந்தைகளில் உள்ள கழிவுகளை எந்த உரிமத்தின் அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்கின்றனர் என்று கேள்வி எழுப்பிய அவர்கள், உரிய அனுமதியின்றி செயல்படும் வாரச்‌ சந்தைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...