தேர்தலை மனதில் கொண்டு சொத்துவரி மறுபரிசீலனை செய்ய மூன்று நபர் குழு: நா.கார்த்திக் விமர்சனம்

கோவை: சொத்துவரி மறுபரிசீலனை செய்ய மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற உள்ளாட்சித்துறை அமைச்சரின் அறிக்கை தேர்தலை மனதில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் விமர்சித்துள்ளார்.

கோவை: சொத்துவரி மறுபரிசீலனை செய்ய மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற உள்ளாட்சித்துறை அமைச்சரின் அறிக்கை தேர்தலை மனதில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் விமர்சித்துள்ளார்.



கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் வடகோவையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்துடன் 26 ஆண்டுகளுக்குப் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் மாநகராட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், மக்களிடம் கருத்து கேட்காமல் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத மாநகராட்சியை கண்டித்தும் வரும் 28ம் தேதி தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்த அவர், சொத்துவரி 2018ம் ஆண்டு 100 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது சொத்துவரி மறுபரிசீலனை செய்ய மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற உள்ளாட்சித்துறை அமைச்சரின் அறிக்கை, தேர்தலை மனதில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

வார்டு மறுவரையில் பல்வேறு குழறுபடிகள் உள்ளதாகவும் அதிமுகவிற்கு சாதகமாக வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், மக்கள் பிரச்சனைகளுக்கு ஜனநாயக அறவழியில் போராட்டம் நடத்த கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும் வரும் 28ம் தேதி அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....