மாவோயிஸ்ட் தீபக்கை மனித உரிமை வழக்கறிஞர் குழுவினர் சந்திக்க காவல்துறை அனுமதி மறுப்பு

கோவை: சிறைவாசிகள் சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மாவோயிஸ்ட் தீபக்கை மனித உரிமை வழக்கறிஞர் குழுவினர் நேரில் சந்திக்க நீதிமன்ற உத்தரவு இருந்தும் அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை: சிறைவாசிகள் சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மாவோயிஸ்ட் தீபக்கை மனித உரிமை வழக்கறிஞர் குழுவினர் நேரில் சந்திக்க நீதிமன்ற உத்தரவு இருந்தும் அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை வழக்கறிஞர்கள் இன்று நேரில் சந்திக்க நீதிபதி அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து வழக்கறிஞர் குழுவினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் அனுமதி கோரினர். ஆனால் உதவி இருப்பிட மருத்துவ அலுவலர் பொன்முடி செல்வன் அனுமதி மறுத்துவிட்டார்.



இதைத்தொடர்ந்து மனித உரிமை வழக்கறிஞர் குழுவினர், நீதிமன்ற அனுமதி உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் அனுமதி பெற்றனர். பின்னர், சிறைவாசிகள் சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை மனித உரிமை வழக்கறிஞர்கள் சந்திக்க காவல்துறையிடம் நீதிமன்ற உத்தரவு நகலை காண்பித்துள்ளனர். ஆனால் காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கறிஞர் குழுவினர் மீண்டும் நீதிமன்றத்திற்கு விரைந்தனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....