கோவை: ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்கும் புதிய கருவியை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

திருச்சி மணப்பாறையில் ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த சுஜீத் என்ற இரண்டு வயது சிறுவன் மீட்க முடியாமல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே கவலையடையச் செய்தது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போது மீட்புப் பணிக்காக நம்மிடம் போதிய உபகரணங்கள் இல்லாததே இதுபோன்ற உயிரிழப்புக்கு காரணமாக அமைகிறது.
இதனை கண்டு மிகவும் மனவருத்தபட்ட மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சுபாஸ் சந்திரன் என்ற மாணவன், இதற்கான தீர்வை நோக்கிய தனது ஆய்வை துவக்கிய நிலையில், இன்று ஆழ்குழாய் கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்கும் புதிய கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
மிகவும் எளிய முறையில் இதனை உருவாக்கியுள்ள மாணவன் சுபாஸ் சந்திரன், இதற்காக கடந்த ஒரு மாதகாலமாக இடைவிடாது பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு தனது தந்தையின் உதவியுடன் இதனை சாதித்துள்ளார். குழந்தை ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தவுடன் மேலும் கீழே இறங்காமல் இருக்க மெல்லிய வடிவில் சுமார் 5 கிலோ எடை வரை தாங்கக் கூடிய ஒரு பைப்பை கொண்டு தாங்கி பிடிப்பதுடன் குழந்தையின் கைகளில் பாதிப்பு இல்லாத வகையில் சுறுக்கு வைத்து மேலே எடுக்க முடியும் என்பதை மாணவன் இன்று தனது பள்ளியில் சக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் செய்து காண்பித்தார்.

மேலும், அதே உபகரணத்தில் குழந்தையின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் நவீன கேமராக்கள் பொறுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபடக் கூடிய வகையில் இதனை வடிவமைத்துள்ளார். மாணவன் சுபாஸ் சந்திரனின் இந்த செயலை கண்டு சக மாணவர்களும், ஆசிரியர்களும் அவரை வெகுவாக பாராட்டினர். இன்றைய மாணவர்களே நாளைய அறிவியலாளர்கள் என்பதை உணர்ந்து உருவாக்கிய இந்த மாணவனின் கண்டுபிடிப்பு அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது. விரைவில் அரசு அதிகாரிகள் முன்னிலையில் செயலாக்கம் காண்பிக்க உள்ளதாக தெரிவித்தனர்.