கோவை: சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமான ஐ.ஐ.டி. நிர்வாகத்தை கண்டித்தும், பேராசிரியர் பத்மநாபன் உள்ளிட்ட மூன்று பேராசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் கோவையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப். இவர் சென்னை கிண்டில் உள்ள ஐஐடி வளாகத்தில் சராவியு பெண்கள் விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு எம்.ஏ. படித்து வந்தார். இவர் கடந்த 8ம் தேதி இரவு தனது அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவரது செல்போனில் தனது தற்கொலைக்கு பேராசிரியர் பத்மநாபன் காரணம் என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், கோட்டூர்புரம் போலீஸ் தரப்பில் மாணவி மதிப்பெண் குறைவாக எடுத்த காரணத்தினாலேயே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்குக் காரணமான ஐ.ஐ.டி. நிர்வாகத்தைக் கண்டித்தும், பேராசிரியர் பத்மநாபன் உள்ளிட்ட மூன்று பேராசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தியும், பேராசிரியர்கள் நியமனத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க கோரி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் கோவையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.