கால அவகாசம் அளிக்காமல் செங்கல் சூளைகளை மூட வேண்டும்; மாவட்ட வருவாய் அலுவலரிடம் பாமகவினர் மனு

கோவை: கால அவகாசம் வழங்காமல் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளையை உடனடியாக மூடவேண்டும் என வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் அசோக் ஸ்ரீநிதி பாமக மாநில இளைஞரணி செயலாளர் தலைமையில் மனு அளித்தனர்.


கோவை: கால அவகாசம் வழங்காமல் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளையை உடனடியாக மூடவேண்டும் என வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் அசோக் ஸ்ரீநிதி பாமக மாநில இளைஞரணி செயலாளர் தலைமையில் மனு அளித்தனர்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:-

அனுமதியின்றி செயல்படும் 141 செங்கல் சூளைகளை மூட விளக்கம் கேட்டு, செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாள் கால அவகாசம் கொடுத்துள்ளனர்.



கனிமம் மற்றும் சுரங்கத்துறைக்கு செங்கல் சூளைகள் சார்பாக ஆண்டுதோறும் பணம் செலுத்தி வருகின்றனர். அப்படி செலுத்தும் தொகைக்கு அவர்கள் பஞ்சமி நிலத்திலுள்ள மண்ணை எடுத்து வருவது அதிகாரிகளுக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை என குற்றம்சாட்டினர்.

செங்கல் சூளை நடத்த வேண்டுமென்றால் தேசிய பசுமைத்தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்ற ஆணையின்படி சுற்றுச்சுழல் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மலைதள பாதுகாப்பு அமைப்பு, வனத்துறை,கனிமம் மற்றும் சுரஙகத்துறை, மின்சார வாரியம், உள்ளிட்ட 9 துறைகளிடம் முறையான அனுமதி பெற்ற பின்னரே நடத்த முடியும். ஆனால் எவ்வித அனுமதியும் பெறாத செங்கல் சூளைகளை உடனே மூட வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், அனுமதியின்றி செயல்படும் 50 செங்கல் சூளைகளை மூட மாவட்ட ஆட்சியர் கடந்த அக்., 29ம் தேதி உத்தரவிட்ட நிலையில், தொடர்ந்து அந்த சூளைகள் செயல்பட்டு வருவதாக தடாகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கணேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.



உரிய ஆவணங்களின்றி இயங்கி வரும் செங்கல் சூளையிலிருந்து, சுமார் 4500 செங்கற்களை அதிகப்படியான பாரம் ஏற்றி சென்ற லாரி ஒன்று நேற்று பெரியநாய்க்கன்பாளையம் அருகே ஏற்படுத்திய விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்ததாகக் கூறிய அவர், உடனடியாக செங்கல் சூளைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....