நீலகிரி: நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த, 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில், அடிக்கடி நிலச்சரிவு காரணமாக நீலகிரியின் பல பகுதிகளில் போக்குவரத்து தடைபட்டது.

சாலைகளில் மண் சரிவுகள் ஏற்பட்டதாலும், மரங்கள் விழுந்ததாலும் ஊட்டி - மஞ்சூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், சாலை சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால், ஊட்டி - மஞ்சூர் இடையிலான சாலை போக்குவரத்து மூடப்பட்டுள்ளது.
நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் பாலகோலா-ஆதிகரட்டி-கைக்கட்டி பாதை வழியாக திருப்பி விடப்படுகின்றன. இரு சக்கர வாகனங்கள் ஊட்டி-மஞ்சூர் பிரதான சாலையைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.