காய்ச்சல் பாதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 வயது சிறுவன் பலி

கோவை: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன் காய்ச்சல் பாதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன் காய்ச்சல் பாதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முதலிபாளையம் சிட்கோ பகுதியில் கடந்த சில நாட்களாகவே டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த சிட்கோ பகுதியிலிருந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் ஒருவாரத்திற்கு என நான்கு முதல் ஐந்து பேர் வரை அனுமதிக்கப்படுகின்றனர்.

இப்படியிருக்க இன்று திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் காய்ச்சல் பாதிப்பினால் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனின் மகன் சித்தார்த் (3). இவர் கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், குழந்தையின் உடல்நிலை மோசமானதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

பின்பு, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் நலப் பிரிவில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதும், தற்போது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து உறவினர்கள் இறந்த சிறுவனின் உடலை வார்டில் இருந்து பிரேத கிடங்கிற்கு தோளில் தூக்கியபடி கொண்டு வந்தனர்.காய்ச்சல் பாதிப்பால் சிறுவன் பலியான சம்பவம் மருத்துவமனையில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை, அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...