திருப்பூரில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட குவியும் விருப்ப மனுக்கள்

திருப்பூர்: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட திருப்பூர் மாநகர அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் ஆர்வமுடன் விருப்ப மனு கொடுக்க குவிந்து வருகின்றனர்.

திருப்பூர்: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட திருப்பூர் மாநகர அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் ஆர்வமுடன் விருப்ப மனு கொடுக்க குவிந்து வருகின்றனர்.



தமிழக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் நவ.,15 மற்றும் 16ல் கட்சி அமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகங்களில் கட்டணங்களைச் செலுத்தி, விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25 ஆயிரமும், வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், நகர்மன்ற தலைவர் பதவிக்கு ரூ.10 ஆயிரமும், நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ.2,500, பேரூராட்சி தலைவர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,500ம் விருப்ப மனு கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



மாவட்ட வாரியாக விண்ணப்பப் படிவங்களை பெறும் கட்சி நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி திருப்பூர் மாவட்டத்தில் மாநகர் மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆனந்தன், செ.ம.வேலுச்சாமி, பா.வே.தாமோதரன் ஆகியோர் தலைமையிலான கட்சி நிர்வாகிகளும் புறநகர் மாவட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், லியாகத்அலிகான், சின்னச்சாமி தலைமையிலான நிர்வாகிகள் விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றனர்.



திருப்பூர் மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக போட்டியிட எம்எஸ்ம் அனந்தன் விருப்ப மனு செய்துள்ளார். அதேபோல், மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கான விருப்ப மனுக்களை அதிமுகவினர் விறுவிறுப்பாகவும் ஆர்வத்துடனும் கொடுத்து வருகின்றனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....