திமுக சார்பில் கோவை மாநகராட்சி மேயர், மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 750 பேர் விருப்ப மனு

கோவை: கோவை மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிட இதுவரை 750 பேர் விருப்ப மனு பெற்றுள்ளனர்.

கோவை: கோவை மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிட இதுவரை 750 பேர் விருப்ப மனு பெற்றுள்ளனர்.

கடந்த 2011ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் பதவிக்காலம் 2016ல் முடிவடைந்து. இதனை தொடர்ந்து 2016ல் நடைபெற வேண்டிய தேர்தல் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இது தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த முழு வீச்சில் தயாராகி வருகிறது. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபே என எதிர்பார்ப்புகள் உள்ளதால் அரசியல் கட்சியினர் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களின் விருப்ப மனுக்களை நா.கார்த்திக் எம்எல்ஏ வழங்கினார். காலை 11 மணி நிலவரப்படி 750 பேர் விண்ணப்பங்கள் பெற்று உள்ளனர். விருப்ப மனுக்கள் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று முதல் வழங்கப்படுகின்றது.



இந்த விருப்ப மனு நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, உமா மகேஸ்வரி, பகுதி கழக செயலாளர் எஸ்.எம்.சாமி, பகுதி கழக பொறுப்பாளர்கள் சேதுராமன், பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மகுடபதி, அணி அமைப்பாளர்கள் கோட்டை அப்பாஸ், ரகுமான், இராமமூர்த்தி, தீர்மான குழு மு.ரா.செல்வராஜ், மாரிசெல்வம், வழக்கறிஞர்கள் அன்புச்செழியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



இதே போல் மதிமுக சார்பாக போட்டியிட விரும்புவர்களிடம் மனுக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அளிக்கபட்டு இருந்தது. அந்த மனுக்களை இன்று சித்தாபுதூர் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் பெறபட்டு வருகிறது.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...