கோவை: கோவை கோல்டு வின்ஸ் அருகே நேற்று அதிமுக கொடி கம்பம் சாய்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளரும்,சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நா.கார்த்திக் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

கோல்டு வின்ஸ் பகுதியில் நேற்று முதல்வர் எடப்பாடி வருகைக்காகவும், அதிமுக இல்ல திருமண நிகழ்ச்சிக்காகவும் அதிமுக கொடிகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது, அந்த வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்ற அனுராதா (22) என்ற இளம்பெண்ணின் மீது அதிமுக கொடி கம்பம் சாய இருந்த நிலையில், தடுமாறிய அந்த பெண் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் அந்த பெண்ணின் இரண்டு கால்களிலும் பலத்த காயமடைந்து நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நா.கார்த்திக் இன்று மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ.கார்த்திக், நீதிமன்ற அறிவுரைக்குப் பின்னரும் இது போன்ற செயல்களில் தொடர்ந்து அதிமுகவினர் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது எனவும் சட்டத்தை மீறி கொடிக் கம்பங்கள் அமைத்த அதிமுகவினர் மீது போலீசார் பாகுபாடின்றி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்றும் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துக்குள்ளான வழக்கை சாதாரண விபத்து வழக்காக காவல் துறை மாற்றியிருப்பதாக குற்றச்சாட்டினார்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த அனுராதாவை மருத்துவமனையில் அனுமதித்த வடிவேல் என்பவரை சட்டத்திற்கு புறம்பாக காவல் நிலையத்தில் இரவு வரை வைத்திருந்தது ஏன் என கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் வருகைக்காக வைத்திருந்த அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்ததே விபத்திற்கு காரணம் எனவும் விபத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், அனுமதி பெற்று கொடிக்கம்பங்கள் நடப்பட்டதா? என்பது குறித்து விளக்க அளிக்க வேண்டும் என்று கூறினார்.