கோவை: விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.
கோவை: விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பதை நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அமமுகவை சேர்ந்த புகழேந்தி அதிமுகவில் இணைய கடிதம் கொடுத்தால், தலைமை கழகம் பரிசீலித்து முடிவெடுக்கும் என்றும் உள்ளாட்சித் தேர்தலை, தேர்தல் ஆணையம் குறித்த காலத்தில் தேர்தல் அறிவிப்பார்கள் என நம்புவதாகவும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என தெரிவித்தார்.

பின்னர், தமிழகத்தில் வெற்றிடம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ரஜினிகாந்த் ஒரு நடிகர், அரசியல் தலைவர் அல்ல, விறுவிறுப்பான செய்தி வேண்டுமென்பதற்காக ரஜினியின் கருத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதாக கூறினார்.
மேலும், சென்னையில் காற்று மாசு இல்லை என்பதை வருவாய்த் துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளதாக கூறிய அவர், தொல்லியல் துறை வசமுள்ள மாமல்லபுரத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து சுற்றுலா தளமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.