நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியே உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

கோவை: விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நகராட்சி நிர்வாகம்‌ ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ திரு.எஸ்‌.பி.வேலுமணி மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்‌.


கோவை: விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நகராட்சி நிர்வாகம்‌ ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ திரு.எஸ்‌.பி.வேலுமணி மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்‌.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பதை நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அமமுகவை சேர்ந்த புகழேந்தி அதிமுகவில் இணைய கடிதம் கொடுத்தால், தலைமை கழகம் பரிசீலித்து முடிவெடுக்கும் என்றும் உள்ளாட்சித் தேர்தலை, தேர்தல் ஆணையம் குறித்த காலத்தில் தேர்தல் அறிவிப்பார்கள் என நம்புவதாகவும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என தெரிவித்தார்.



பின்னர், தமிழகத்தில் வெற்றிடம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ரஜினிகாந்த் ஒரு நடிகர், அரசியல் தலைவர் அல்ல, விறுவிறுப்பான செய்தி வேண்டுமென்பதற்காக ரஜினியின் கருத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதாக கூறினார்.

மேலும், சென்னையில் காற்று மாசு இல்லை என்பதை வருவாய்த் துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளதாக கூறிய அவர், தொல்லியல் துறை வசமுள்ள மாமல்லபுரத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து சுற்றுலா தளமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....