நடமாட முடியாத குட்டி யானையுடன் தாய் யானையின் பாசப்போராட்டம்; உடனடியாக சிகிச்சையளிக்க கோரிக்கை

நடமாட முடியாத குட்டி யானையுடன் தாய் யானையின் பாசப்போராட்டம்; உடனடியாக சிகிச்சையளிக்க கோரிக்கை

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கால் ஊனம் ஏற்பட்டு அவதிப்பட்டுவரும் 8 மாத குட்டி யானைக்கு உடனடியாக சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் கோவை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கங்கள், மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.



அப்போது, கால் ஊனம் ஏற்பட்டு அவதிப்பட்டு வரும் குட்டி யானையை காப்பாற்றக் கோரி, விடுதலை சிறுத்தை கட்சி கோவை மண்டல அமைப்பு செயலாளர் கலையரசன் மனு ஒன்றை அளித்தார்.

அதில், கோவை வால்பாறை தாய்முடி எஸ்டேட் பகுதிக்கு யானைகள் கூட்டமாக வந்துள்ளது. இதில் ஒரு தாய் யானையுடன் வந்த அதன் 8 மாத குட்டி யானைக்கு கால் ஊனம் ஏற்பட்டு அதே பகுதியில் கடந்த நான்கு வாரமாக மிகவும் அவதிப்பட்டு வருகின்றது. இதனால் தாய் யானையும் அங்கேயே குட்டி யானையை பாதுகாத்து வருகின்றது. மேலும், அங்கு வசிக்கும் மக்களுக்கும் உயிர் சேதம் ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக குட்டி யானையை மீட்டு உயரிய மருத்துவ சிகிச்சை அளித்திட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...