கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட்டை வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள "ரெட் ஜோனில்" சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை இன்று அதிகாலை ஒரு மணியளவில் நேரில் சந்தித்த முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சக்திவேல் அவரை வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள "ரெட் ஜோனில்" சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை இன்று அதிகாலை ஒரு மணியளவில் நேரில் சந்தித்த முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சக்திவேல் அவரை வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். 

கடந்த 9ஆம் தேதி உளவுத்துறை மூலம் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சேம்பு கரையிலிருந்து பெருமாள் முடி அடிவாரம் தேடியதில் துப்பாக்கியுடன் சென்றுகொண்டிருந்த மூன்று பேரை பிடிக்க தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் முற்பட்டனர். அவர்கள் தப்பி தப்பியோடிய போது இதில் ஒருவர் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

இதைதொடர்ந்து அவரை மீட்டு வீரபாண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை கொடுத்து. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

பின்னர் நடைபெற்ற விசாரணையில் பிடிபட்ட நபர் மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த தீபக் என்பதும், இவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், இவரது உண்மை பெயர் சந்துரு என்பதும் தெரியவந்துள்ளது. 

ஆனால் அவர் தன்னை சீனிக் என்றும் தான் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் சொல்லி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...