கூடலூர் சாலையில் நடமாடும் புலி; வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறை எச்சரிக்கை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் சுல்தான் பத்தேரி செல்லும் சாலையி்ல் நேற்று இரவு புலி ஒன்று நடமாடியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில்  சுல்தான் பத்தேரி செல்லும் சாலையி்ல் நேற்று இரவு புலி ஒன்று நடமாடியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். 

நீலகிரி  மாவட்டம் கூடலூர், மசினகுடி, முதுமலை ஆகிய பகுதிகள் தமிழக - கர்நாடக மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ளன. அங்கு, முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் பந்திப்பூர்  புலிகள் காப்பகம் முத்தங்கா புலிகள் காப்பகம் ஆகியவை அடுத்தடுத்துள்ளது. 

அவ்வழியாக, செல்லும் சாலைகளில் யானை மற்றும் மான்கள் சாலையோரங்களில் கூட்டம் கூட்டமாக வலம் வருவது வாடிக்கை. ஆனால், அரிதாகவே புலிகளை காண முடியும். இந்த புலிகள் காப்பகங்களிலும் புலிகள் அதிகளவு உள்ள போதிலும், எப்போதாவது தான் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு புலிகள் 

தென்படும்.

இந்தநிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூரில் சுல்தான் பத்தேரி செல்லும் சாலையி்ல் நேற்று (சனியன்று) இரவு புலி ஒன்று நடமாடியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சிறிதுதூரம் சாலையிலேயே கம்பிரமாக நடந்து சென்ற புலி பிறகு வனப்பகுதியில் சென்று மறைந்தது. 

இரவு நேரங்களில் பாட்டவயல் வழி பத்தேரி செல்லும் அனைத்து வாகன ஓட்டிகள் முக்கியமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....