நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் சுல்தான் பத்தேரி செல்லும் சாலையி்ல் நேற்று இரவு புலி ஒன்று நடமாடியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி, முதுமலை ஆகிய பகுதிகள் தமிழக - கர்நாடக மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ளன. அங்கு, முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகம் முத்தங்கா புலிகள் காப்பகம் ஆகியவை அடுத்தடுத்துள்ளது.
அவ்வழியாக, செல்லும் சாலைகளில் யானை மற்றும் மான்கள் சாலையோரங்களில் கூட்டம் கூட்டமாக வலம் வருவது வாடிக்கை. ஆனால், அரிதாகவே புலிகளை காண முடியும். இந்த புலிகள் காப்பகங்களிலும் புலிகள் அதிகளவு உள்ள போதிலும், எப்போதாவது தான் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு புலிகள்
தென்படும்.
இந்தநிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூரில் சுல்தான் பத்தேரி செல்லும் சாலையி்ல் நேற்று (சனியன்று) இரவு புலி ஒன்று நடமாடியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சிறிதுதூரம் சாலையிலேயே கம்பிரமாக நடந்து சென்ற புலி பிறகு வனப்பகுதியில் சென்று மறைந்தது.
இரவு நேரங்களில் பாட்டவயல் வழி பத்தேரி செல்லும் அனைத்து வாகன ஓட்டிகள் முக்கியமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.