நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பெட்டட்டி கிராமத்தில் கடந்த மாதம் நகைகள் மற்றும் பணம் திருட்டு சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பெட்டட்டி கிராமத்தில் கடந்த மாதம் நகைகள் மற்றும் பணம் திருட்டு சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்
குன்னுார் அருகே உள்ள பெட்டட்டி கிராமத்தில் கடந்த மாதம் மாசி என்பவர் வீட்டில் சுமார் 33 1/2 பவுன் நகைகள் மற்றும் 3 லட்சம் ரொக்கப் பணம் திருட்டு போனது, இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் குன்னூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர்
தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், அருவங்காடு பகுதியில் வெலிங்டன் காவல் ஆய்வாளர் ஆனந்த தலைமையில் வாகன சோதனை நடைப்பெற்று வந்தது.
இந்த நிலையில் பெட்டட்டி பகுதியை சேர்ந்த குமார் வாகனத்தை ஒட்டி வந்த போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குபின் முரணாக பதில் கூறிய நிலையில் அருவங்காடு காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரை விசாரணை மேற்கொண்டதில் மாசி என்பவர் வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து 29 I/2 பவுன் நகைகள் மற்றும் 3 லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்து கோத்தகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று இரவு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.