முதுமலை புலிகள் காப்பகத்தில் இறந்து கிடந்த யானை குட்டி; வனத்துறையினர் விசாரணை

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் மசினகுடி வனச்சரகத்தின் ஜகலிகவுடா யானை வழித்தட பகுதியில் ஆண் குட்டி யானை இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் மசினகுடி வனச்சரகத்தின் ஜகலிகவுடா யானை வழித்தட பகுதியில் ஆண் குட்டி யானை இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.



முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அருகே யானை வழித்தட பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், தகவலறிந்து விரைந்து வந்த முதுமலை வெளிவட்ட பகுதி, துணை இயக்குனர் ஸ்ரீகாந்த், வனச்சரகர் மாரியப்பன், காந்தன், முரளி ஆகியோர் குட்டி யானையின் உடலை ஆய்வு செய்தனர்.

வனத்துறையினர், வனவிலங்கு ஆர்வலர்கள் முன்னிலையில், மசினகுடி அரசு கால்நடை மருத்துவர் கோச்சலன், யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.



இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ஆண் குட்டி யானை இறந்து இரண்டு நாட்கள் இருக்கும் எனவும் பிரசவத்தின்போது விழுந்த போது, தாய் யானை அதனை நிற்க வைப்பதற்காக உதைத்ததில் உடலில் சில இடங்களில் காயம் ஏற்பட்டு, அதன் காரணமாக இறந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறிய அவர்கள், இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....