நீலகிரியில் மலைப்பாதையில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் வன விலங்குகளுக்கு ஆபத்து ; நடவடிக்கை எடுக்க கோரி வனவிலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தல்

நீலகிரி : நீலகிரியில் மலைப்பாதையில் வீசி செல்லும் பிளாஸ்டிக் பொருட்களால் வன விலங்குகளுக்கு ஆபத்து இருப்பதால் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

நீலகிரி : நீலகிரியில் மலைப்பாதையில் வீசி செல்லும் பிளாஸ்டிக் பொருட்களால் வன விலங்குகளுக்கு ஆபத்து இருப்பதால் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மலைப் பாதையில் வீசிச்செல்லும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.



நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனத்தில் பயணிக்கும்போதும், கல்லட்டி போன்ற சாலையில் பயணிக்கும் போதும் தாங்கள் கொண்டு வரக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை வீசி செல்கின்றனர்.



இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், வனத்துறை சார்பில் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சுற்றுலா பயணிகள் வன விலங்குகளுக்கு உணவளித்து வருகின்றனர்.



மேலும், உணவு பொருட்களை பிளாஸ்டிக் பைகளுடன் வீசி செல்வதால் அவற்றை உண்ணும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் பொருட்களை மாவட்டத்திற்குள் கொண்டு வர தடை விதித்துள்ளது. பர்லியார், கல்லார் உள்ளிட்ட பகுதியில் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், தற்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்கள் காணப்படுகிறது. எனவே வாகனங்களை முறையாக சோதனை மேற்கொள்ள வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....