இருசக்கர வாகனத்தை நிறுத்த லத்தியை வீசிய காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

கோவை : பொள்ளாச்சி அருகே வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் விதி மீறி சென்ற 3 இளைஞர்களை தடுத்து நிறுத்துவதற்காக, வாகனத்தின் மீது லத்தியை வீசிய காவல் உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை : பொள்ளாச்சி அருகே வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் விதி மீறி சென்ற 3 இளைஞர்களை தடுத்து நிறுத்துவதற்காக, வாகனத்தின் மீது லத்தியை வீசிய காவல் உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பந்தம் கோட்டூர் காவல் எல்லைக்குட்பட்ட சங்கம்பாளையம் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தார். 

அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் அமர்ந்து வந்த இளைஞர்கள், போலீசார் வாகனத்தை நிறுத்த சொல்லியும் நிறுத்தாமல் சென்றனர். இதனால் சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பந்தம் என்பவர், இருசக்கர வாகனத்தின் மீது லத்தியை வீசியதாக கூறப்படுகிறது.



அந்த லத்தி சக்கரத்தில் சிக்கியதால் நிலைதடுமாறி மூவரும் கீழே விழுந்தனர். இதில் சர்தார் அலி என்ற இளைஞரின் கால் எலும்பு முறிந்தது. மற்ற இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர். இதையறிந்த பொதுமக்கள், பலத்த காயம் அடைந்த இளைஞர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலு‌ம், போலீசாரே விபத்துக்கு காரணம் என கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்த நிலையில், இளைஞர்கள் மீது தடியை வீசிய சம்பவத்தில் உதவி ஆய்வாளர் சம்பந்தத்தை பணியிடை நீக்கம் செய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவிட்டார். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த டி.எஸ்.பி விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....