கோவை : பொள்ளாச்சி அருகே வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் விதி மீறி சென்ற 3 இளைஞர்களை தடுத்து நிறுத்துவதற்காக, வாகனத்தின் மீது லத்தியை வீசிய காவல் உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை : பொள்ளாச்சி அருகே வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் விதி மீறி சென்ற 3 இளைஞர்களை தடுத்து நிறுத்துவதற்காக, வாகனத்தின் மீது லத்தியை வீசிய காவல் உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பந்தம் கோட்டூர் காவல் எல்லைக்குட்பட்ட சங்கம்பாளையம் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் அமர்ந்து வந்த இளைஞர்கள், போலீசார் வாகனத்தை நிறுத்த சொல்லியும் நிறுத்தாமல் சென்றனர். இதனால் சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பந்தம் என்பவர், இருசக்கர வாகனத்தின் மீது லத்தியை வீசியதாக கூறப்படுகிறது.

அந்த லத்தி சக்கரத்தில் சிக்கியதால் நிலைதடுமாறி மூவரும் கீழே விழுந்தனர். இதில் சர்தார் அலி என்ற இளைஞரின் கால் எலும்பு முறிந்தது. மற்ற இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர். இதையறிந்த பொதுமக்கள், பலத்த காயம் அடைந்த இளைஞர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், போலீசாரே விபத்துக்கு காரணம் என கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த நிலையில், இளைஞர்கள் மீது தடியை வீசிய சம்பவத்தில் உதவி ஆய்வாளர் சம்பந்தத்தை பணியிடை நீக்கம் செய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவிட்டார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த டி.எஸ்.பி விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.