கோவை : கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கோவையில் நடைபெற்ற பேரணியில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தேசிய மாணவ பேரியக்கமான கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா துவக்கப்பட்டு இந்தாண்டோடு பத்தாண்டுகள் நிறைவடைந்தது. கண்ணியத்தின் பத்தாண்டுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம், பேரணிகள், இரத்ததான முகாம்கள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக அண்ணா சிலையில் இருந்து சமூக மாற்றத்திற்கான மாணவ பேரணியை மாநில செயலாளர் முஹம்மது தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியில் மாணவர்களின் கண்ணியத்தை நிலை நிறுத்துவது, சமூக மாற்றத்தில் மாணவர்களை பங்கு கொள்ள செய்வது, கல்வியில் சம உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இப்பேரணியில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.