தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் - ரூ.1.43 லட்சம் அபராதம் விதிப்பு

கோயம்புத்தூர்‌ : கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, மேற்கு மண்டலம்‌, பூ மார்க்கெட்‌ பகுதியிலுள்ள கடைகளில்‌ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பைகள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டு ரூ.1,43,400/- மதிப்பில்‌ அபராதம்‌ விதிக்கப்பட்டது.


கோயம்புத்தூர்‌ : கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, மேற்கு மண்டலம்‌, பூ மார்க்கெட்‌ பகுதியிலுள்ள கடைகளில்‌ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பைகள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டு ரூ.1,43,400/- மதிப்பில்‌ அபராதம்‌ விதிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, 6மற்கு மண்டலம்‌, பூ மார்க்கெட்‌ கடைவீதி பகுதியில்‌ 50-க்கும்‌ மேற்பட்ட கடைகளில்‌ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ விற்பனை செய்யப்படுகிறதா என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ திரு.ஷரவன்குமார் ஜடாவத் இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்‌. இந்த ஆய்வில்‌, பூ மார்க்கெட்‌ பகுதியில்‌ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பைகள்‌ உபயோகப்படுத்தப்படுகிறதா என கடை கடையாக சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது, தமிழக அரசால்‌ தடைசெய்யப்பட்ட 50 மைக்ரான்‌ குறைவாக உள்ள சுமார்‌ 140 கிலோ பிளாஸ்டிக்‌ பைகள்‌ மாநகராட்சி பணியாளர்கள்‌ சுமார்‌ 50 நபர்கள்‌ மூலம்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளாகளுக்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம்‌ விதித்து மாநகராட்சி ஆணையாளர்‌ உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல உதவி ஆணையாளர்‌ செந்தில் ‌அரசன்‌‌, மேற்கு மண்டல தூய்மை பாரத இயக்க தூதுவர்‌ சாந்திபிரியா அவர்கள்‌, மண்டல சுகாதார ஆய்வாளர்‌ குணசேகரன்‌ மற்றும்‌ மாநகராட்சி பணியாளர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....