கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், பூ மார்க்கெட் பகுதியிலுள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1,43,400/- மதிப்பில் அபராதம் விதிக்கப்பட்டது.
கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், பூ மார்க்கெட் பகுதியிலுள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1,43,400/- மதிப்பில் அபராதம் விதிக்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாநகராட்சி, 6மற்கு மண்டலம், பூ மார்க்கெட் கடைவீதி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் திரு.ஷரவன்குமார் ஜடாவத் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வில், பூ மார்க்கெட் பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தப்படுகிறதா என கடை கடையாக சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 50 மைக்ரான் குறைவாக உள்ள சுமார் 140 கிலோ பிளாஸ்டிக் பைகள் மாநகராட்சி பணியாளர்கள் சுமார் 50 நபர்கள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளாகளுக்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில் அரசன், மேற்கு மண்டல தூய்மை பாரத இயக்க தூதுவர் சாந்திபிரியா அவர்கள், மண்டல சுகாதார ஆய்வாளர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.