கோவை : கோவை 6 வது குற்றவியல் நீதிமன்றம் இன்று வழங்கிய மூன்று ஆண்டு சிறை தண்டணையை எதிர்த்து அடுத்த வாரம் மேல் முறையீடு செய்ய இருப்பதாக கேரளாவை சேர்ந்த சரிதா நாயர் தெரிவித்தார்.

கோவை நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இன்று நீதிமன்றம் விதித்த தண்டணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் நீதிமன்ற உத்திரவினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
தன் மீது தொடரப்பட்ட வழக்கு சிவில் வழக்கு தன்மை கொண்டது எனவும், ஆனால் கிரிமினல் வழக்காக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது என தெரிவித்த அவர், கோவை 6 வது குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அடுத்த
வாரம் மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், கேரளாவில் தன் மீது தொடரப்பட்ட வழக்குகள் பெரும்பாலும் முடிந்து விட்டதாகவும், மீதம் உள்ள வழக்குகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்ள போவதாகவும் தெரிவித்தார்.
நான் ஒரு பெண் என்பதால் அலைகழிக்கப்படுகின்றேன் எனவும், கோவை நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் இந்த வழக்கை சந்தித்து இருக்கின்றேன் எனவும், இந்த தீர்ப்பையும் எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறேன் என தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் தன்னை பற்றி இருந்த வீடியோ எதுவும் இப்போது இல்லை எனவும் அவை அகற்றப்பட்டு விட்டது எனவும் தெரிவித்தார்.
மேலும், கேரள காங்கிரஸ் கட்சியில் இருந்து இப்போது தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும், காங்கிரஸ் கட்சி பூஜ்ஜியமாகி விட்டது எனவும், அந்த கட்சி தலைவர்கள் சிறையில் இருப்பதால் என்னை மிரட்ட அவர்களுக்கும் நேரமில்லை எனவும் தெரிவித்தார்..
அந்த கட்சி தலைவர்கள் சிறையில் இருக்கின்றனர் எனவும் இன்னும் சிலர் சிறை செல்ல இருக்கின்றனர் எனவும் சரிதா நாயர் தெரிவித்தார்.