ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி: துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்

கோவை : கோவை ரயில்‌ நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை ரயில்வே காவலர், துரிதமாக செயல்பட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றினார்.

கோவை : கோவை ரயில்‌ நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை ரயில்வே காவலர், துரிதமாக செயல்பட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றினார்.

கோவை ரயில்‌ நிலையத்தில் இன்று காலை 3வது பிளாட் பார்மிலிருந்து புறப்பட்ட ரயிலை பிடிப்பதற்காக பயணி ஒருவர்‌ வேகமாக ஒடி சென்று ஒரு பெட்டியில்‌ ஏற முயன்ற போது, எதிர்பாராத விதமாக அந்த பயணி தடுமாறி விழுந்தார்.



அப்போது, அங்கு பணியில்‌ இருந்த ரயில்வே காவல் அதிகாரி பி.வி.ஜெயன், துரிதமாக செயல்பட்டு அந்த பயணியை நோக்கி ஓடிச் சென்று, அவரை பாதுகாப்பாக ரயிலினுள் ஏற்றிவிட்டார். இதனால்‌ அதிர்ஷ்டவசமாக அந்த பயணி எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார்‌. இதைத்தொடர்ந்து, அந்த காவலருக்கு, அவரது மனிதநேயத்தை பாராட்டி ரயில்வே நிர்வாகம்‌ சார்பில்‌ பரிசு வழங்கப்பட்டது.

இந்த சிசிடிவி வீடியோ காட்சிகள்‌ தற்போது இணையத்தில்‌ வைரலாக பரவி வருகிறது. மேலும்‌, துரிதமாக செயல்பட்ட அந்த அதிகாரிக்கு பலரும்‌ பாராட்டு தெரிவித்து வருகின்றனர்‌. பாதுகாப்பு படைக்கு இது போன்ற பொறுப்பான அதிகாரிகளே தேவை என்றும்‌ உங்களின்‌ முயற்சியால்‌ விலை மதிப்பில்லாத ஒரு உயிர்‌ காப்பாற்றப்பட்டுள்ளது என்றும்‌ பலரும்‌ சமூகவலைதளங்களில்‌ கமெண்ட்‌ செய்து வருகின்றனர்‌.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....