கோவை : கோவை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை ரயில்வே காவலர், துரிதமாக செயல்பட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றினார்.

கோவை ரயில் நிலையத்தில் இன்று காலை 3வது பிளாட் பார்மிலிருந்து புறப்பட்ட ரயிலை பிடிப்பதற்காக பயணி ஒருவர் வேகமாக ஒடி சென்று ஒரு பெட்டியில் ஏற முயன்ற போது, எதிர்பாராத விதமாக அந்த பயணி தடுமாறி விழுந்தார்.

அப்போது, அங்கு பணியில் இருந்த ரயில்வே காவல் அதிகாரி பி.வி.ஜெயன், துரிதமாக செயல்பட்டு அந்த பயணியை நோக்கி ஓடிச் சென்று, அவரை பாதுகாப்பாக ரயிலினுள் ஏற்றிவிட்டார். இதனால் அதிர்ஷ்டவசமாக அந்த பயணி எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார். இதைத்தொடர்ந்து, அந்த காவலருக்கு, அவரது மனிதநேயத்தை பாராட்டி ரயில்வே நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
இந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், துரிதமாக செயல்பட்ட அந்த அதிகாரிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பாதுகாப்பு படைக்கு இது போன்ற பொறுப்பான அதிகாரிகளே தேவை என்றும் உங்களின் முயற்சியால் விலை மதிப்பில்லாத ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என்றும் பலரும் சமூகவலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.