கோவை மாவட்ட தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க தேர்தல்: இமயவரம்பன் அணி வெற்றி

கோவை : தாமஸ் கிளப்பில் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க, கோவை மாவட்ட நிர்வாகிகள் சங்க தேர்தலில் இமயவரம்பன் அணி 183 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.


கோவை : தாமஸ் கிளப்பில் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க, கோவை மாவட்ட நிர்வாகிகள் சங்க தேர்தலில் இமயவரம்பன் அணி 183 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.



தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க கோவை மாவட்ட நிர்வாகிகள் சங்க தேர்தல் தாமஸ் கிளப்பில் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுந்தரராமன் தலைமையிலான பாரதி அணியும் முத்துக்குமார் தலைமையிலான இமயவரம்பன் அணியும் போட்டியிட்டன.



மொத்தம் 440 உறுப்பினர்கள் கொண்ட வருவாய் அலுவலர் சங்கத்தில் நேற்றைய தேர்தலில் 358 பேர் வாக்களித்தனர். இந்தத் தேர்தலில் மாவட்ட தலைவர் போட்டிக்கு பாரதி அணி சார்பில் போட்டியிட்ட சுந்தரராமனை எதிர்த்து இமயவரம்பன் அணியைச் சேர்ந்த முத்துக்குமார் போட்டியிட்டு 183 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அதேபோல, செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட சண்முக ராஜ் 182 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பொருளாளர் பதவிக்கான தேர்தலில் பாரதி அணியைச் சேர்ந்த ஹாரிஸ் 203 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தனபால் 152 வாக்குகள் பெற்றுத் தோல்வி அடைந்தார். பாரதி அணியில் வெற்றி பெற்ற ஒரே நபர் ஹாரிஸ் மட்டுமே.

மேலும், இனை செயலாளர்(நகரம்)-(புறநகர்) துணைத் தலைவர் (நகரம்)-(புறநகர்) ஆகிய பதவிகளுக்குப் போட்டியிட்ட இமயவரம்பன் அணியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். தேர்தல் அலுவலர் முருகானந்தம், சிலம்பரசன் தலைமையில் நேற்று மதியம் ஒரு மணிக்குத் துவங்கிய வாக்குப்பதிவு, இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் வெளியிடப்பட்டது.

வெற்றி பெற்றவர்களை வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பூச்செண்டு கொடுத்தும் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....