கோத்தகிரியில் தொடர் கனமழை : சுமார் 50 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் நாசம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவிலான மலைத் தோட்ட காய்கறிகள் சேதமடைந்தன. இதன் மதிப்பு சுமார் 50 லட்சம் என கூறப்படுகிறது.

நீலகிரி :  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவிலான மலைத் தோட்ட காய்கறிகள் சேதமடைந்தன. இதன் மதிப்பு சுமார் 50 லட்சம் என கூறப்படுகிறது.

கோத்தகிரி பகுதியில் தேயிலைக்கு அடுத்தபடியாக நீர் ஆதாரம் உள்ள விளை நிலங்களில், மலைக்காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, நெடுகுளா, குருக்கத்தி, காவிலோரை உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் மலை காய்கறிகளான கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் உள்ள ஓடைகள் தூர்வாரப்படாமல் சுருங்கிவிட்டதால், மழைநீரை சேமிக்க முடியாத நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ஓடையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இதில், பெரும்பாலான தோட்டங்களில் அறுவடைக்கு தயாரான கேரட், முட்டைகோஸ் போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டது. மழை ஓய்ந்த பின்பு தோட்டங்களை பராமரித்தும் விவசாயிகளால் பயிர்களை முழுமையாக பாதுகாக்க முடியாத நிலையில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஓடைகள் தூர்வாரப்படாததால், சமீபத்தில் பெய்த மழையில், சுமார், 60 ஏக்கர் பரப்பளவிலான காய்கறி தோட்டங்கள் சேதமடைந்து விட்டன. இதன் மதிப்பு சுமார் 50 லட்சம் என கூறப்படுகிறது. எனவே, எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க, ஓடைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....