கோவை : கோவையில் விவசாயி ஒருவர் சேமித்து வைத்திருந்த ரூ. 50,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை எலி கடித்து நாசமாக்கியதையடுத்து விவசாயியின் பணத்தை மாற்றி தர வங்கி அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

பணப்பெட்டகங்கள் உடைய எல்லா வங்கிக் கிளைகளும் பழைய கிழிந்த, சிதைந்த ரூபாய் நோட்டுகளை எல்லா வேலை நாட்களிலும் மாற்றித் தர வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கியின் நோட்டு மாற்றும் விதிகள் 2009-ன் விதி எண் 2 (j)-ன்படி, அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி ரங்கராஜ் தான் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த 50 ஆயிரம் ரூபாயை எலிகள் கடித்து இருந்த தனது பணத்தை மாற்ற மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஸ்டேட் வங்கிக்கு சென்றுள்ளார்.
ஆனால், வங்கி அதிகாரிகள் பணத்தை மாற்றித் தர மறுத்து விட்டனர். மேலும் பணத்தை சென்னையில் மாற்றிக் கொள்ளும்படியும் வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த விவசாயி பணத்தை மாற்ற வேறுவழியின்றி அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.
இதுகுறித்து விவசாயி ரங்கராஜ் பேசுகையில், ''விவசாய அறுவடைக்குப் பின்னர் நான் சம்பாதித்த பணத்தை எலி கடித்துவிட்டது. இந்தப் பணத்தை உள்ளூர் வங்கிகளில் கொடுத்தேன். ஆனால், அவர்கள் வாங்க மறுத்துவிட்டார்கள்'' என்று வேதனையுடன் கூறினார்.