வால்பாறையில் காலில் கட்டியால் பாதிக்கப்பட்டுள்ள குட்டி யானை : சிகிச்சை அளிக்க கோரிக்கை

கோவை : வால்பாறையில் காலில் கட்டியால் பாதிக்கப்பட்டுள்ள குட்டி யானையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை : வால்பாறையில் காலில் கட்டியால் பாதிக்கப்பட்டுள்ள குட்டி யானையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது நல்லமுடி தேயிலைத் தோட்டம். இங்குள்ள தேயிலை தோட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்க இயலாமல் தவித்து வந்தனர்.



இந்த நிலையில், தேயிலை தோட்ட நிர்வாகம் காட்டு யானைகளை விரட்ட முயற்சி செய்தனர். பல மணி நேர போராட்டத்திற்குப்பின் இரண்டு காட்டு யானைகளை தவிர மற்ற காட்டு யானைகள் அங்கிருந்து நகர்ந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் நின்று கொண்டன. தேயிலை தோட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒற்றை காட்டு யானை மற்றும் அதன் இரண்டு வயது குட்டியை கண்காணித்தபோது குட்டி யானையின் காலில் கட்டி இருப்பதால் அதனால் நடக்க முடியாத நிலை இருப்பது தெரிய வந்தது.



கடந்த ஒரு வார காலமாக அந்த யானை குட்டியுடன் அப்பகுதியிலேயே இருப்பதால் கொழுந்து பறிக்கும் பணிகள் பாதிப்படைகின்றன. மேலும், காலில் கட்டியால் பாதிக்கப்பட்டுள்ள குட்டி யானைக்கு உடனடியாக வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து குட்டி யானையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....