கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்றுவந்த 70 பேர் பூரண குணமடைந்ததாக மருத்துவமனை முதல்வர் தகவல்

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த 70 பேர் சிகிச்சை முடிந்து நல்ல முறையில் வீடு திரும்பியுள்ளதாக கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அசோகன் தெரிவித்துள்ளார்.


கோவை : கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த 70 பேர் சிகிச்சை முடிந்து நல்ல முறையில் வீடு திரும்பியுள்ளதாக கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அசோகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இதையடுத்து, காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழையை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு, மலேரியா போன்ற பல்வேறுவகையான வைரஸ் காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளிகள் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அசோகன் கூறுகையில்;-

கோவை உட்பட திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ,திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளிகள் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பினால் வருபவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்படி அளிக்கப்படும் சிகிச்சைகள் மூலம் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து பலர் குணமடைந்துள்ளனர்.

குறிப்பாக கடந்த மாதம் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்றுவந்த 73 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல இந்த மாதம் தற்போது வரை 70 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . இதன் தொடர்ச்சியாக இன்று டெங்கு காய்ச்சல் பாதிப்பில் 18 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களும் விரைவில் நலமுடன் வீடு திரும்புவார்கள் என அவர் தெரிவித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....