சட்டவிரோத லாட்டரி விற்பனையைத் தொடர்ந்து வேட்டையாடும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் : அன்னூரில் 13 பேர் கைது

கோவை : அன்னூர் அருகே சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியான நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமாரே நேரடியாக சோதனை நடத்தி 13 பேரை கைது செய்துள்ளார்.


கோவை : அன்னூர் அருகே சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியான நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமாரே நேரடியாக சோதனை நடத்தி 13 பேரை கைது செய்துள்ளார். 

அன்னூர் காவல்நிலைய சரகம் அன்னூர் - புளியம்பட்டி சாலையில் செல்லப்பம்பாளையம் பேருந்து நிறுத்தம் பின்புறம் அமைந்துள்ள சுந்தராஜ் என்பவருக்கு சொந்தமான தகர சீட்டு வேயப்பட்ட கொட்டகையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி வியாபாரம் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் மேட்டுப்பாளையம் காவல்நிலைய பயிற்சி துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் மற்றும் தனிப்படை போலீசார் இன்று திடீர் சோதனை நடத்தினர்.



சோதனையின் போது, மூன்று வயர்லெஸ் போர்ட்டபுள் பிரிண்டர் வைத்து லாட்டரி வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் சொல்லும் மூன்று நம்பரை பிரிண்ட் செய்து கொடுத்துவிட்டு லாட்டரி சீட்டு தொகையை வசூல் செய்து வந்தது தெரியவந்தது.



இதையடுத்து, லாட்டரி தடை சட்டத்தின் கீழ் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், துரைசாமி, ஜீவா, ரமேஷ், நவீன், செந்தில், செந்தில்குமார், வெள்ளிங்கிரி, பழனிச்சாமி, வேலுச்சாமி, தர்மன், அருள் பிரகாசம், பொன்ராஜ், மரிய லூயிஸ் ஆகிய 13 பேர் கைது செய்யப்பட்டனர். 



மேலும், மூன்று வயர்லெஸ் போர்ட்டபுள் பிரிண்டர், 22 ஆண்ட்ராய்டு செல்போன், நான்கு சக்கர வாகனம் மற்றும் ரூ. 1,09,609 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாகியுள்ள சுந்தர்ராஜ், சாமிநாதன், ஹரி, பிரபு மற்றும் கஜேந்திரன் ஆகியோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

கோவை மாவட்டத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்பாக இதுபோன்ற அதிரடி நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் தெரிவித்தார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...