கோவை : மேட்டுப்பாளையம் அருகே மழை வேண்டி, மேளதாளம் முழங்க கழுதைகளுக்கு திருமணம் செய்து கிராம மக்கள் விநோத வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து கடந்த ஜந்து ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சியால் பாதிக்கப்பட்டு வரும் இந்த கிராம மக்கள், விவசாயம் செய்யவும், குடிநீருக்கும் தண்ணீர் இன்றி அவதியடைந்து வருகின்றனர். எனவே, மழை பெய்ய வேண்டி இறைவனிடம் வேண்டும் வகையில், கழுதைகளுக்கு திருமணம் செய்து விநோத வழிபாடு நடத்த ஊர் கிராம மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
அதில், இலக்கேப்பாளையம் கிராமத்தினர் பெண் வீடாகவும், பக்கத்து கிராமமான கோவில்பாளையத்தில் மாப்பிள்ளை வீடாகவும் பாவித்து திருமணம் நடத்தபட்டது. இலக்கேபாளையம் கிராமத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் இந்த கல்யானி திருமணம் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் கழுதைகளை கொண்டு வந்து குளிப்பாட்டி பெண்ணுக்கு வளையல், பொட்டு வைத்து சேலை கட்டப்பட்டது. மாப்பிள்ளைக்கு வேட்டிகள் கட்டி அலங்காரம் செய்யபட்டது. இதனையடுத்து, கிராம மக்கள் சார்பில் முறைப்படி மாப்பிள்ளை வீடு அழைப்பு நடத்துவதுபோல் கழுதைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கோவில் வழிபாடு நடத்தப்பட்டது. சுப்பரமணியர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு கழுதைகளுக்கு ஊர் பெரியவர்கள் சார்பில் அர்ச்சகர்கள் கொண்டு தாலி கட்டி திருமண வைபவம் நடத்தப்பட்டது. நிஜ கல்யாணம் போலவே தாழிகட்டி மொய் வைத்து கிராம மக்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த கல்யாண வைபவத்தால் கிராம மக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு மழை வேண்டி வழிபட்டனர்.
இது குறித்து பேசிய இந்த கிராம மக்கள், கடந்த 1984ஆம் ஆண்டு இந்த பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டு மக்கள் தண்ணீருக்கு அவதிபட்டனர். அப்போது, ஊர் பெரியவர்கள் சார்பில் நடத்தப்பட்ட கல்யானி திருமணத்தால் மழை வந்து பஞ்சம் தீர்ந்ததாம். எனவே, இதுபோன்ற வைபவம் நடத்தப்பட்டதால் மீண்டும் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் இந்த கல்யாணம் நடைபெற்றது, என்றனர். இந்த நிகழ்ச்சியில் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.