நீலகிரி : நீலகிரியில் மாவட்டத்தில் 2-வது சீசனை வரவேற்கும் விதமாக உதகையில் இன்று பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் 15-ம் ஆண்டு அணிவகுப்பு நடைபெற்றது.

அரசு தமிழக மாளிகை முகப்பில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இந்த அணிவகுப்பை தொடங்கி வைத்தார். மேலும், உதகை தமிழக மாளிகையில் துவங்கப்பட்ட இந்த கார்களின் அணிவகுப்பு ஹில் பங்க், ஸ்டீபன் பேராலயம், கமர்ஷியல் சாலை வழியாக ஆனந்த கிரிக்கு அணிவகுத்து வந்ததை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்பி புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

ரஷ்யா நாட்டில் 1931-ம் ஆண்டின் ஆஸ்டின், 1936-ம் ஆண்டின் னரல், 1946-ம் ஆண்டின் வோல்ஸ் வேகன், 1966 ஆண்டின் மோரிஸ், ஜாகுவார், பிளைமௌத் என 80-க்கும் மேற்பட்ட கார்கள், 40-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் இந்த அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தன.

கொட்டும் மழை மற்றும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது உதகையில் நடைபெற்ற இந்த கார்களின் அணிவகுப்பை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர். தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களைச் சார்ந்த வாகனங்கள் இதில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.